ரெயில்வே அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் ரயில்வே திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு
Posted On:
30 DEC 2020 1:32PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரில் வடக்கு ரெயில்வே கட்டுமானக் கடிதத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்கள் குறித்து ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
கத்ரா-பனிகல் இடையே நடைபெறும் ரயில்வே திட்ட பணிகள் நிலவரம் குறித்து மத்திய அமைச்சருக்கு தலைமை நிர்வாக அதிகாரி திரு விஜய் சர்மா விளக்கினார்.
ரயில்வே திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல், இத்திட்டங்களை நிறைவு செய்து ஜம்மு காஷ்மீர் மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும், அப்போதுதான் இப்பகுதியில் நல்ல போக்குவரத்து ஏற்பட்டு, காஷ்மீர் மக்கள் நாட்டின் இதர பகுதி மக்களுடன் ஆண்டு முழுவதும் தொடர்பில் இருப்பர் எனவும் அமைச்சர் கூறினார். எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கும்படியும் மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
ரம்பன் மற்றும் ரியாசி மாவட்டங்கள் கோவிட் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அங்கு ரயில்வே பணிகள் தொடர்ந்து நடப்பதாக வடக்கு ரயில்வே பொது மேலாளர் திரு அசுதோஷ் காங்கல் தெரிவித்தார்.
உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684586
-----
(Release ID: 1684700)
Visitor Counter : 167