திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

110-வது அனைத்திந்தியப் பயிற்சியாளர் வணிகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

प्रविष्टि तिथि: 29 DEC 2020 6:02PM by PIB Chennai

மத்திய திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிற்சிகளுக்கான தலைமை இயக்குநரகம், 110-வது அனைத்திந்திய பயிற்சியாளர் வணிகத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுகளில் சுமார் 96 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்களின் தேர்ச்சி விகிதம் 58.41 சதவீதமாகவும், ஆண்களின் தேர்ச்சி விகிதம் சதவீதமாகவும் 51.44 உள்ளது. பானிபட்-ஹரியானா எச் எம் சி டி-யை சேர்ந்த செல்வி. சினேகா இந்தத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 95.96 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள டெக்ஸ்மாகோ ரயில் & இன்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கல்யாண் ராணா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை பெல் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. எம்.செல்வம் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684420

------


(रिलीज़ आईडी: 1684503) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi