கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து நீர்வள அமைச்சகத்தின் நிறைவு அறிக்கை

Posted On: 29 DEC 2020 4:51PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு கொள்கை இடையீடுகளும், புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முக்கியமானவை வருமாறு:

கோவிட் மேலாண்மை:

•        கோவிட்-19 பெருந்தொற்றினால் துறைமுகங்களும், அதைச் சார்ந்த பங்குதாரர்களும் பொதுமுடக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். எனினும் பெருந்தொற்றின் தாக்கத்தைக் குறைத்து விநியோகச் சங்கிலி இயக்கத்தை சுமுகமாக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டது.

•        முக்கியமான துறைமுகங்களில் ஊழியர்கள் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு ரூ. 5 இலட்சம் நிதி உதவி வழங்க துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வள அமைச்சகம் உத்தரவிட்டது.

•        துறைமுகங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கவும், அவர்களது உடைமைகளைப் பாதுகாக்கவும், உணவு வழங்கவும் முக்கியமான துறைமுகங்களில் போதுமான இடங்கள் ஒதுக்கப்பட்டன.

•        முக்கியமான துறைமுகங்களில் தனிமைப்படுத்தும் வசதியும், இதர மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

•        மனித இடர்பாடுகளைக் குறைக்கும் வகையில் பெருந்தொற்று காலத்தில் தொழில்நுட்பம்/ டிஜிட்டல் சார்ந்த சேவைகள் ஊக்குவிக்கப்பட்டன.

•        பல்வேறு சவால்களுக்கு இடையேயும் அனைத்துத் துறைமுகங்களும் முழுமையாக இயங்கி அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியம் பங்கு வகித்தன.

சாகர்மாலா திட்டம்:

•        இந்தியத் துறைமுகங்களை சர்வதேசத் தரத்தில் உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 504 திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன- 211 துறைமுகங்களை  நவீனமயமாக்கும் திட்டங்கள், 199 துறைமுகங்களை இணைக்கும் திட்டங்கள், 32 துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் திட்டங்கள், 62 கடல்சார் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள். கடந்த 15 மாதங்களில் (ஜூலை 2019- அக்டோபர் 2020) ரூ.4,543 கோடி மதிப்பில் 20 சாகர்மாலா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

கோகா- ஹசீரா ரோ- பாக்ஸ் படகுப் போக்குவரத்து:

•        பிரதமர் திரு.நரேந்திர மோடி ரோ- பாக்ஸ் முனையத்தை ஹசீராவிலும், கோகா- ஹசீரா இடையே படகுப் போக்குவரத்து சேவையையும் காணொலி வாயிலாக கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

கப்பல் அமைச்சகத்திற்குப் புதிய பெயர்:

•        மத்திய கப்பல் துறையின் பெயரை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை என கோகா- ஹசீரா ரோ- பாக்ஸ் படகுப் போக்குவரத்து சேவையின் துவக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார்.

நாட்டின் முதல் கடல் விமானச் சேவை:

•        இந்தியாவின் முதல் கடல் விமானச் சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தின் கெவாடியா முதல் சபர்மதி ஆற்றுப்படுகை வரை தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684394

-----(Release ID: 1684464) Visitor Counter : 226


Read this release in: English , Hindi , Punjabi , Gujarati