திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் ஆண்டு நிறைவு அறிக்கை

Posted On: 29 DEC 2020 1:01PM by PIB Chennai

திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு மேற்கொண்ட முக்கிய முன்முயற்சிகளை வெளியிட்டுள்ளது. அவற்றின் சுரக்கம் கீழே தரப்படுகின்றது:

கொள்கை முன்முயற்சிகள்:

•        தேசிய திறன் வளர்ச்சி முகமை மற்றும் தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் ஆகியவை தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி அமைப்புடன் இணைக்கப்பட்டன.

•        தேசிய திறன் மேம்பாட்டு இயக்கத்தின் நிர்வாக குழுவின் நான்காவது கூட்டம் அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. பிரதமர் கவுஷல் விகாஸ் திட்டம் 3.0-வின் முக்கிய அம்சங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் திட்டம்:

•        பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் 3.0 (2020-21) திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி செலவின நிதி குழு ஒப்புதல் வழங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் 2020- 21-ஆம் ஆண்டில் ரூ. 948.90 கோடி மதிப்பில் சுமார் 8 இலட்சம் பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கவிருக்கிறது.

•        புதிய மின் ஆளுகைக்கான ஒருங்கிணைந்த அலைபேசி செயலி (உமங்) தளத்தில் பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்களை பதிவேற்றல், பயிற்சி மையத்தை கண்டறிதல், தற்போதைய நிலையை அறிதல் போன்ற சேவைகளை இந்தத் தளத்தின் வாயிலாகப் பெறலாம்.

ஸ்டிரைவ்:

•        தொழில் மதிப்பை உயர்த்துவதற்காக திறனை வலுப்படுத்தும் திட்டத்தின் (ஸ்டிரைவ்) கீழ் 33 தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள் இணைந்துள்ளன.

•        இதுவரை 244 தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள் செயல் திறன் அடிப்படையிலான மானிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

•        இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய அரசு - ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

•        இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை 32 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றின்போது மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள்:

•        தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள்/ தொழிலியல் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து வளாகங்களையும் தனிமைபடுத்தும் கண்காணிக்கும் முகாம் அமைக்க  அமைச்சகம் கையளிக்க தயாராக இருந்தபோதிலும், 12  தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள்/ தொழிலியல் பயிற்சி நிறுவன கட்டிடங்களை மட்டுமே கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்கான  மாவட்ட அதிகாரிகள் கையகப்படுத்திக் கொண்டனர். இதேபோல் பிரதமர் கவுஷல் விகாஸ் திட்டத்தின் பயிற்சி மையங்களும் தனிமைப்படுத்தல் இடங்களாகவும் தற்காலிக மருத்துவமனைகளாகவும் செயல்படுகின்றன.

•        அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் தயாரிக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

•        கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள்/ தொழிலியல் பயிற்சி நிறுவனங்கள் புதுமையான வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளை வழங்கிவருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684320

*****************



(Release ID: 1684375) Visitor Counter : 404