அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 நிகழ்ச்சியில், உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் சந்திப்பு(ஜிஸ்ட்): மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடக்கம்

Posted On: 23 DEC 2020 5:54PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ன் ஒரு பகுதியாக நடக்கும் உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் கூட்டத்தை(ஜிஸ்ட்) மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டிருக்கும் பாக்கியத்தை இந்தியா பெற்றுள்ளது. அவர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் முன்னேற்றத்துக்காக மட்டும் தங்கள் பங்களிப்பை அளிக்கவில்லை, அவர்கள் தங்கள் அறிவையும், அனுபவத்தையும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பகிர்ந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் மிகப் பெரிய ஆற்றலை பயன்படுத்த, அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் அல்ல, உலக நன்மைக்காக. இந்த கூட்டம் உலகளாவிய இந்திய விஞ்ஞானிகள் இடையே நீண்ட கால தொடர்பை ஏற்படுத்தும். இது ஊரக பகுதிகளின் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். நாட்டையும், மனித இனத்தையும் மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கியமானது என்பதை நாம் அறிவோம். தொழில்நுட்பங்கள்தான் அனைத்துவித வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன மற்றும் மனிதனின் திறமைகளையும் அதிகரிக்கின்றன என்பதை அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன.

பருநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு, எரிசக்தி முதல் ஏழ்மை ஒழிப்பு வரை பல சவால்களை  இன்று இந்த உலகம் சந்திக்கிறது. இவற்றுக்கெல்லாம்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம்தான் தீர்வு காண முடியும்.

எந்த நாடும், இதை தனியாக சாதிக்க முடியாது. இது போன்ற சவால்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம்தான் தீர்க்க முடியும்.

இவ்வாறு  மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசினார்.

இந்தஜிஸ்ட்கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், அங்கோலா, அங்கிலா, ஆஸ்திரேலியா, சுவிசர்லாந்து மற்றும் நமது நாட்டில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், உட்பட பலதரப்பினரும் பங்கேற்கின்றனர். வேளாண்மை, நீர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சுகாதாரம், கல்வி குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1683029

                                                                              -----



(Release ID: 1683105) Visitor Counter : 198