எரிசக்தி அமைச்சகம்
பெருமைமிகு சிஐஐ-ஐடிசி விருதுகளை என்டிபிசி வென்றது
இடுகை இடப்பட்ட நாள்:
23 DEC 2020 5:33PM by PIB Chennai
நாட்டின் மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளரான என்டிபிசி லிமிடெட், பெருமைமிகு சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருதுகள் 2020-இல் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவில் சிறந்து விளங்குவதற்கான விருதை வென்றது.
என்டிபிசி லிமிடெட்டின் குறிப்பிடத்தகுந்த சாதனையை பாராட்டி பெருநிறுவன உயர் சிறப்புப் பிரிவில் அந்நிறுவனத்துக்கு கௌரவம் அளிக்கப்பட்டது.
காணொலி மூலம் நடைபெற்ற 15-வது சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருதுகள் 2020 விழாவில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரிடம் இருந்து என்டிபிசி லிமிடெட்டின் மனிதவள பிரிவு இயக்குநர் திரு டிகே பட்டேல் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவில் சிஐஐ-ஐடிசியால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது இதுவாகும். பெருநிறுவன உயர் சிறப்புப் பிரிவில் விருதை பெறும் ஒரே பொதுத்துறை நிறுவனம் என்டிபிசி ஆகும்.
2019 மற்றும் 2020 என்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, பெருநிறுவன உயர் சிறப்புப் பிரிவில் சிஐஐ-ஐடிசி நிலைத்தன்மை விருதுகளை என்டிபிசி பெற்றுள்ளது.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1683056)
வருகையாளர் எண்ணிக்கை : 215