நிதி அமைச்சகம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்கள் முதன்மை

Posted On: 23 DEC 2020 11:11AM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை முதன் முதலில் அமல்படுத்தியுள்ளன. மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் வழிகாட்டுதலின் படி இந்த இரு மாநிலங்களும்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளன.

இதையடுத்து, இரு மாநிலங்களும் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம் ரூ. 4,898 கோடி கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆந்திரப்பிரதேசம் ரூ. 2,525 கோடியும், மத்தியப்பிரதேசம் ரூ. 2,373 கோடியும் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மொத்த மாநில உற்பத்தியில் 2 சதவீதம் கடனை அந்தந்த மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய அரசு கடந்த மே 17-ஆம் தேதி அறிவித்திருந்தது. மக்கள் மைய சீர்திருத்தங்களை மேற்கொள்வது இதன் முக்கியமான நோக்கமாகும். அதன் படி மாநிலங்கள் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நிறைவு செய்த பிறகு மொத்த மாநில உற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்குக் கூடுதல் கடன் பெறலாம்.

 

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தை அமல்படுத்துதல், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சீர்திருத்தம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு/ பயன்பாட்டு சீர்திருத்தங்கள், மின்துறை சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு முக்கியமான துறைகளில் மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682876

*****************



(Release ID: 1682958) Visitor Counter : 167