பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா, ஜப்பான் பாதுகாப்பு உறவு குறித்து இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்
Posted On:
22 DEC 2020 5:49PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு கிஷி நோபுவோ உடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார். பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு கிஷி-க்கு பாராட்டு தெரிவித்த திரு ராஜ்நாத் சிங், கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு உறவுகள் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு குறித்தும், சுதந்திர, திறந்த நிலையில், விதிகளின் அடிப்படையில் கடல்சார் அமைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
இந்தியா, ஜப்பான் நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், இந்திய- ஜப்பான் சிறப்பு பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பங்கேற்பின் கீழ் ராணுவ படைகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் உறுதியுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682714
------
(Release ID: 1682799)
Visitor Counter : 172