குடியரசுத் தலைவர் செயலகம்

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற பொது மருத்துவமனைகள் முக்கிய பங்காற்றியுள்ளன: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு

Posted On: 21 DEC 2020 2:34PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் போன்ற பொது மருத்துவமனைகள் முக்கிய பங்காற்றியுள்ளன என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின், 16வது பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், வீடியோ மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

 பொது மருத்துவமனைகளின் முயற்சிகளால், அதிக மக்கள் தொகை, குறைந்த வருவாய் இருந்தபோதிலும், கோடிக்கணக்கான மக்களால்கொவிட்-19 சவால்களை  எதிர்கொள்ள முடிந்தது. கொரோனாவை எதிர்கொண்ட கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியின் முன்களப் பணியாளர்களுக்கு நன்றிகொரோனா முன்களப் பணியாளர்கள் பலர், இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு நாடு என்றும் கடன் பட்டுள்ளது.

21ம் நூற்றாண்டு சுகாதார சேவையில், தகவல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் மருத்துவர்களின் தனிப்பட்ட திறமைகளை பயன்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகள் நடந்து வருகின்றன.   உயிரி அறிவியலுடன், பிக் டேட்டா, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை முறையாக ஒருங்கிணைக்கப்படுவதால், சுகாதாரத்துறையில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. 58 சிறப்புத் துறைகளை கொண்டுள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம், ஆராய்ச்சியில் வலுவாக உள்ளது. உயர் மட்ட ஆராய்ச்சி திட்டங்களிலும் இந்த மையம் ஈடுபட வேண்டும்.

இந்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் கடந்த சில தசாப்தங்களாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல முக்கிய பதவிகளில் உள்ளனர்இந்த சங்கத்தில் உள்ள 12,500 பேர் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், அறிவு இணையதளம் ஒன்றை உருவாக்கி அதில் மருத்துவம் தொடர்பான தங்கள் அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சை கிடைப்பதால்பல நாடுகளில் இருந்து மக்கள் உயர் சிகிச்சை பெற இந்தியா வருகின்றனர். நாட்டின் மருத்துவ துறையில் பழைய மற்றும் புதிய தலைமறை டாக்டர்கள் புரட்சிகரமான மாற்றங்களை  ஏற்படுத்த வேண்டும். இந்தியாவுக்கு சென்றால் குணமடையலாம் என உலகளவில் கூறப்படும் அளவுக்கு இந்திய சுகாதாரத்துறை இருக்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

•••••

(Release ID: 1682366)



(Release ID: 1682386) Visitor Counter : 176