அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020: விஞ்ஞானிகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
Posted On:
20 DEC 2020 1:59PM by PIB Chennai
நடைபெற உள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-இல் இளம் விஞ்ஞானிகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் காணொலி வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்)- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஇசிஆர்ஐ) சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் திரு இ. அருணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர்-சிஇசிஆர்ஐ இயக்குநர் டாக்டர். என். கலைச்செல்வி மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் எர்ணாகுளம் கள மக்கள் தொடர்புப் பிரிவு, கேரளா பத்திரிகை தகவல் அலுவலகம், திருவனந்தபுரத்தின் சிஎஸ்ஐஆர்- ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய கழகம் (என்ஐஐஎஸ்டி), விஞ்ஞான் பாரதி மற்றும் எர்ணாகுளத்தின் புனித தெரசா கல்லூரியின் உயிரியல் பிரிவு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020 தொடர்பாக அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு, இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள் மற்றும் நோக்கம் குறித்து உரையாடினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682155
-------
(Release ID: 1682195)
Visitor Counter : 271