எஃகுத்துறை அமைச்சகம்

கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியில் செயில் எஃகு ஆலைகளின் பங்களிப்புக்கு அமைச்சர் பாராட்டு

Posted On: 18 DEC 2020 6:07PM by PIB Chennai

செயில் நிறுவனத்தின் இஸ்கோ எஃகு ஆலை மற்றும் துர்காபூர் எஃகு ஆலையை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

மேற்கு வங்கத்தின் பர்ன்பூர் மற்றும் துர்காபூரில் அமைந்துள்ள இந்த ஆலைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியில் செயில் எஃகு ஆலைகளின் பங்களிப்புக்குப் பாராட்டு தெரிவித்தார்.

ஆலைகளின் செயல்பாடு மற்றும் இந்த நவீன வசதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறித்து அறிந்து கொள்ள அமைச்சர் ஆர்வம் காட்டினார். இரு ஆலைகளின் செயல்பாடுகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பூர்வோதயா இயக்கத்திற்கு நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்த ஆலைகளின் பங்களிப்பு குறித்துப் பேசிய திரு பிரதான், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்குப் பிராந்தியத்தின் முழுத்திறனையும் வெளிக் கொண்டுவர  இந்த ஏக்கம் உதவும் என்றார்.

செயில் நிறுவனத்தின் இஸ்கோ எஃகு ஆலை மற்றும் துர்காபூர் எஃகு ஆலை கிழக்குப் பிராந்தியத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கே சேவையாற்றப் போவதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681763

**********************


(Release ID: 1681804) Visitor Counter : 154