சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பேரிடரைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி மற்றும் பேரிடர் ஆபத்தைக் குறைத்தலுக்கான ஐநா அலுவலகத்தின் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 17 DEC 2020 8:05PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன், பேரிடரைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக் கூட்டணி மற்றும் பேரிடர் ஆபத்தைக் குறைத்தலுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் கூட்டத்தில், காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்புதல்: வலுவான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைத்தல்என்பது இந்த நிகழ்ச்சியின் மையக்கருவாகும்.

பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பல தரப்பட்ட ஆராய்ச்சிகளில் நமது திறன்களை நாம் மறுபயன்பாட்டுக்கு உள்ளாக்கி உள்ளோம்,” என்று தனது உரையின் போது அமைச்சர் கூறினார்.

அதிக நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் விரைவில் மருத்துவமனைகளை கட்டியெழுப்ப இராணுவ ஆராய்ச்சித் திறன்களை நாம் மறுபயன்பாடு செய்தோம்,” என்று அவர் கூறினார்.

 

மேலும் பேசிய திரு.ஹர்ஷ் வர்தன், “தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியாளராக இருந்த இந்தியா, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதியாளராக தற்போது உள்ளது,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681544

**********************


(Release ID: 1681570) Visitor Counter : 160