ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கோவிட் தொற்று நேரத்தில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது : மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடா உரை

Posted On: 17 DEC 2020 6:40PM by PIB Chennai

கோவிட் தொற்று நேரத்தில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என  மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா கூறினார்.

இந்திய மருந்துத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் வருடாந்திரக் கூட்டத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு சதானந்த கவுடா  தில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறப்பு அங்கீகார விருதுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்  அவர் பேசியதாவது:

இந்த கோவிட் தொற்று காலத்தில் இந்திய மருந்துத்துறையின் பங்களிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மருந்தகமாக இந்தியா குறிப்பிடப்படுகிறது. இது இந்த கோவிட்-19 தொற்று சமயத்தில் உண்மையிலேயே நிருபிக்கப்பட்டது. உயிர் காக்கும் மருந்துகளை இந்தியா தொடர்ந்து உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு அனுப்பியது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் பணியில் ஒவ்வொரு நிறுவனமும், கேட்டுக் கொள்ளப்படாமலேயே களத்தில் குதித்து, அரசுடன் இணைந்து செயல்பட்டன.  முடக்கக் காலத்திலும், மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தடையின்றி கிடைத்தன.

இந்த நெருக்கடி நேரத்தில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு சதானந்த கவுடா  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681499

**********************



(Release ID: 1681560) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Manipuri