கலாசாரத்துறை அமைச்சகம்

இந்தியப் பாரம்பரிய நிறுவனம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்

Posted On: 17 DEC 2020 6:32PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய அருங்காட்சியகங்கள் நிறுவன சங்கத்தின் கூட்டத்துக்கு மத்திய கலாச்சார இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பாட்டீல் தலைமை தாங்கினார்.

வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, இந்தியப் பாரம்பரிய நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்திய அருங்காட்சியகங்கள் நிறுவன சங்கத்தின் பெயரை இந்தியப் பாரம்பரிய சங்க நிறுவனம் என்று மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் இலட்சியத்தின் படியும், 2020-21 மத்திய பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்பின் படியும் உருவாக்கப்பட்டுள்ள இந்தியப் பாரம்பரிய நிறுவனத்தை அமைக்கும் திட்டத்தை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

 

புதிய நிறுவனத்தை அமைப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை 15 நாட்களுக்குள் உறுப்பினர்கள் அனுப்பி வைப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681498

**********************



(Release ID: 1681542) Visitor Counter : 157