ஜல்சக்தி அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், காந்தர்பால் மாவட்டங்களின் அனைத்து ஊரக வீடுகளுக்கும் தண்ணீர்க் குழாய் இணைப்புகள்

Posted On: 17 DEC 2020 6:13PM by PIB Chennai

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரக வீடுகளுக்கும் தண்ணீர்க் குழாய் இணைப்பு வழங்க மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஜல்ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள காந்தர்பால் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 18.17 இலட்சம் ஊரக வீடுகளில் 8.66 இலட்சம் (48%) வீடுகளுக்குத் தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2020-21 ஆண்டுக்குள் 2.32 இலட்சம் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கவும், 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை கோவா மாநிலம், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், காந்தர்பாலில் 18 மாவட்டங்கள், இமாச்சலப்பிரதேசத்தின் லாஹூல் & ஸ்பிடி ஆகிய பகுதிகள் தவிர நாடு முழுவதும் 423 தொகுதிகள், 33000 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 60,000 கிராமங்களில் இந்தத் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681481

**********************



(Release ID: 1681535) Visitor Counter : 188