பாதுகாப்பு அமைச்சகம்

இந்தியா-மாலத்தீவு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய இணையக் கருத்தரங்கும், கண்காட்சியும்

Posted On: 17 DEC 2020 6:12PM by PIB Chennai

இந்தியா-மாலத்தீவு இடையே  பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி இணையக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடந்தது. 

இந்தோ மாலத்தீவு உயர் மட்டப் பாதுகாப்பு கூட்டு ஈடுபாடு என்ற தலைப்பில் இந்த இணையக் கருத்தரங்கு நடந்தது.  இந்திய வர்த்தகத் தொழில்சபை கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) மூலம் இந்தக் கருத்தரங்கை பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புத் துறை நடத்தியது.

நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவை ஊக்குவிப்பதற்காக ஏரோ இந்தியா 21 இணையக் கருத்தரங்குகள் தொடரின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

‘‘நிலையான, வளமான, அமைதியான மாலத்தீவை உருவாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது’’ என இந்த இணையக் கருத்தரங்கில் பேசிய இராணுவத் தளவாட உற்பத்தித் துறை கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ கூறினார். 

தங்களின் தேவைகள் குறித்து மாலத்தீவு தேசியப் பாதுகாப்புப் படை இந்தக் கருத்தரங்கில் விரிவாகத் தெரிவித்தது.  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உட்பட 11 இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் திறனை எடுத்துக் கூறியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681479

**********************



(Release ID: 1681532) Visitor Counter : 196