சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

உத்தரப்பிரதேசம் ராம்பூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 17 DEC 2020 12:45PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் ராம்பூரில் டிசம்பர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை 23வது கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடக்கிறது.

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் நடத்தும்இந்த கைவினைப் பொருள்கள் கண்காட்சியை, ராம்பூர் பன்வாடியா பகுதியில் உள்ள நுமைஷ் மைதானத்தில்  மத்திய குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர்  திரு நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார்.

மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா உட்பட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் முன்னணிக் கலைஞர்கள் உருவாக்கிய உள்நாட்டுப் பொருள்கள் இடம் பெறுகின்றன  என மத்திய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த பாரம்பரிய உணவுகளையும், இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் மக்கள் ருசிக்கலாம். ஒவ்வொரு நாளும் பிரபல கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற மத நல்லிணக்கத்தை உணரும் நிகழ்ச்சியாகவும் இந்த கைவினைப் பொருள்கள் கண்காட்சி இருக்கும். தற்சார்பு இந்தியா பற்றி  கவி சம்மேளனமும் டிசம்பர் 27ஆம் தேதி நடத்தப்படுகிறது.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, நாகாலாந்து, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், பீகார், ஆந்திரா, ஜார்கண்ட், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், லடாக், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள், மரம், பித்தளை, மூங்கில், துணி, காகிதம், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட   கைவினைப் பொருள்களை  இந்தக் கண்காட்சிக்குக் கொண்டு வருகின்றனர் என மத்திய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

*******

 

(Release ID: 1681372)


(வெளியீட்டு அடையாள எண்: 1681423) வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Telugu