விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் வரவேற்கப்படுகின்றன: நரேந்திர சிங் தோமர்

Posted On: 15 DEC 2020 6:50PM by PIB Chennai

வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் வரவேற்கப்படுகின்றன என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய விவசாயிகள் சங்க உறுப்பினர்கள், மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமரை, தில்லியில் உள்ள கிரிஷி பவனில் இன்று சந்தித்து பேசினர்.  வேளாண் சட்டங்களை வரவேற்பதாகவும், இது விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் எனவும்அந்த சங்கத்தின் தலைவர்கள் கூறினர்.  வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான ஆலோசனைகளையும் அமைச்சரிடம் அவர்கள் மனுக்களாக அளித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, விவசாய சங்க தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் நன்றி கூறினார்.  வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வரவேற்கப்படுவதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். உண்மையான விவசாய சங்கங்களுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளுக்கு திறந்த மனதுடன் தீர்வு காண மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு நிலை நிர்வாக முடிவு என்றும், அது தொடரும் எனவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680846

 


(Release ID: 1680918) Visitor Counter : 158