ஆயுஷ்

உத்தராகண்டில் 200 ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்க ஒப்புதல்

प्रविष्टि तिथि: 15 DEC 2020 4:07PM by PIB Chennai

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் உத்தராகண்டில் 200 ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை துவக்குவதற்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த மையங்களுக்கு மாநிலத்தின் ஆயுஷ் துறையுடன் புதுதில்லியைச் சேர்ந்த அரவிந்த் லால் வந்தனா லால் அறக்கட்டளையும் ஆதரவளிக்கும்.

இதுகுறித்த முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 10-ஆம் தேதி கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர், இணைச்செயலாளர் உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் இதே போல் 12,500  ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை வரும் 2023-24 ஆம் ஆண்டுக்குள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680776


(रिलीज़ आईडी: 1680906) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Telugu