அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் ஆர்வத்தை மக்களிடையே தூண்டுவதற்காக விஞ்ஞான யாத்திரைகள்

Posted On: 14 DEC 2020 2:49PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரபலப்படுத்துவதற்காகவும், அறிவியல் ஆர்வத்தை மக்களிடையே தூண்டுவதற்காகாவும் விஞ்ஞான யாத்திரைகளை பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நடமாடும் அறிவியல் கண்காட்சி ஊர்திகள் பல்வேறு நகரங்களில் தங்கள் பயணங்களை தொடங்கியுள்ளன. மக்களிடையே அறிவியல் கலாச்சாரத்தை புகுத்துவது இவற்றின் நோக்கமாகும்.

அனைத்து உள்ளூர் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த நடமாடும் அறிவியல் கண்காட்சியை காண முடியும் என்பதால், அவர்களின் சிந்தனைகள் தூண்டப்பட்டு அறிவியலின் மேல் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இந்திய சர்வதேச அறிவியல் கண்காட்சியை பற்றியும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

நாட்டில் உள்ள சுமார் 30 பகுதிகளில் இந்த அறிவியல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூரில் உள்ள அறிவியல் தகவல் தொடர்பாளர்கள், ஆசிரியர்கள், புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.

 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 25-ஆம் தேதி வரை மெய்நிகர் தளத்தில் நடைபெறும். காணொலி மூலம் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழா இதுவாகும்

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680536

                                                  - -----



(Release ID: 1680610) Visitor Counter : 159