வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நவம்பர் மாதத்துக்கான மொத்தவிலை குறையீட்டு எண்கள்
Posted On:
14 DEC 2020 12:00PM by PIB Chennai
இந்தியாவில், 2020 நவம்பர் மாதத்துக்கான மொத்த விலை குறியீட்டு (தற்காலிக) எண்கள், செப்டம்பர் மாதத்துக்கான இறுதி செய்யப்பட்ட குறியீட்டு எண்கள் ஆகியவற்றை, தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின், பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மொத்த விலை குறியீட்டு தற்காலிக எண்கள், ஒவ்வொரு மாதமும் 14ம்தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படுகிறது. 10 வாரங்களுக்குப் பின் இந்த குறியீட்டு எண்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
பணவீக்கம்
மொத்தவிலை குறியீடு அடிப்படையில் பணவீக்கத்தின் அளவு 2020 நவம்பர் மாதத்தில் 1.55 சதவீதமாக (தற்காலிகம்) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த அளவு 0.58 சதவீதமாக இருந்தது.
அனைத்துப் பொருட்களின் மொத்த விலை குறியீடு, பணவீக்கத்தின் அளவுகளை கீழேயுள்ள இணைப்பில் விரிவாகக் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680499
*****
(Release ID: 1680499)
(Release ID: 1680543)
Visitor Counter : 123