சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ரூ.228.36 லட்சம் மதிப்பில் 3399 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள்

Posted On: 10 DEC 2020 5:40PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு தாவர்சந்த் கெலாட், அசாம் மாநிலத்தின் தர்ரங் நகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணப் பொருட்கள் வழங்கும் முகாமை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமது அமைச்சகம் உறுதியுடன் செயல்படுவதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று தன்னிறைவை அடையும் நோக்கத்துடன் பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ரூ.228.36 லட்சம் மதிப்பில் 3399 பயனாளிகளுக்கு 6482 உதவி உபகரண பொருட்கள் இந்த முகாமில் வழங்கப்பட்டன.

அசாம் மாநிலத்தின் சமூக நலத்துறை மற்றும் தர்ரங் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் இந்திய செயற்கை மூட்டுக் கருவிகள் உற்பத்தி நிறுவனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கொவிட் நடத்தைமுறைகளைப் பின்பற்றி இந்த முகாம் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679705

**************



(Release ID: 1679768) Visitor Counter : 131