மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

போட்டித் தேர்வு, பொதுத் தேர்வுகள் : ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருடன் மத்திய கல்வி அமைச்சர் கலந்துரையாடல்

Posted On: 10 DEC 2020 3:12PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்  ‘நிஷாங்க்’, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் வரவிருக்கும் போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் குறித்து காணொலி வாயிலாக உரையாடினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்கள்தான் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் தூதர்கள் என்று குறிப்பிட்டதுடன், இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜேஇஇ தேர்வு தேதி மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு முறைகள் (மார்ச், ஏப்ரல், மே 2021) ஜெஇஇ 2021 தேர்வை நடத்த வேண்டும் என்ற கருத்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும் என்றும், மொத்தம் கேட்கப்படும் 90  கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வை  மாணவர்கள் ஒன்று முதல் நான்கு முறை வரை எழுதலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் தேர்வு நடைபெறும் என்றும், மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் திரு ரமேஷ் பொக்ரியால்  தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், தேதி குறித்த கேள்விக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடனும், தேசிய மருத்துவ ஆணையத்துடனும் ஆலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் பதிலளித்தார். அதேபோல் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என்றார் அவர்செய்முறை தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத மாணவர்களுக்கு மாற்று வழிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்து பள்ளிகளுக்கு சந்தேகங்கள் இருப்பின் www.cbseacademic.nic.in இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679656

******

 

(Release ID: 1679656)(Release ID: 1679693) Visitor Counter : 239