சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அனைவருக்கும் சுகாதார சேவைகளை வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
08 DEC 2020 7:15PM by PIB Chennai
மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியில் பங்குதாரர்கள் (பி பி டி) அமைப்பின் அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் காணொலி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று உரையாற்றினார்.
பி பி டி அமைப்பின் மதிப்புமிக்க பங்குதாரரான இந்தியா, பிரசவகால இறப்புகளை முடிவுக்குக் கொண்டு வரவும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கான பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நிறைவு செய்யவும், பாலினம் சார்ந்த வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கவும் நைரோபி மாநாட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளது என்றார்.
இந்த இலக்குகளை எட்டுவதற்கான காலக்கெடு 2030 என்று அவர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சுகாதாரச் சேவைகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை பற்றி எடுத்துரைத்த அவர், 7,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சுகாதாரக் காப்பீட்டை வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கி வருகிறது என்றார்.
இந்த திட்டம் 500 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்குப் பலன் அளிப்பதாக கூறிய அமைச்சர், உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதியளிப்புத் திட்டம் இதுவென்றும், இதன் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679131
***********
(Release ID: 1679177)