பாதுகாப்பு அமைச்சகம்
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு இந்திய ராணுவத் தளபதியின் முதல் அரசு முறைப் பயணம்
Posted On:
08 DEC 2020 3:13PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே, டிசம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 14ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில், இரு நாடுகளின் ராணுவ தளபதிகளையும், மூத்த ராணுவ அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு, இந்திய ராணுவத் தளபதி அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதால், இந்தப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
டிசம்பர் 9, 10 தேதிகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ தளபதி பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து, இந்திய - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி அவர் ஆலோசிக்கவுள்ளார்.
அதன்பின், இரண்டாவது தொடர் பயணமாக, சவுதி அரேபியாவில் டிசம்பர் 13, 14 தேதிகளில், ராணுவ தளபதி பயணம் மேற்கொள்கிறார். சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவார். ராயல் சவுதி தரைப்படை தலைமை அலுவலகம், கூட்டுப்படை கட்டுப்பாடு தலைமையகம், மன்னர் அப்துல் ஆசிஸ் ராணுவ அகாடமி ஆகியவற்றுக்கும் ராணுவ தளபதி செல்கிறார். சவுதியில் உள்ள தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் ராணுவ தளபதி அங்குள்ள மாணவர்களுடனும், பேராசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
*******
(Release ID: 1679070)
(Release ID: 1679111)
Visitor Counter : 264