புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
07 DEC 2020 5:38PM by PIB Chennai
மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எஸ் வி ஜெ என் லிமிடெட், பசுமை எரிசக்தி திட்டங்களுக்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமை, பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு தனது சேவைகளை எஸ் வி ஜெ என் லிமிடெட்டுக்கு வழங்கும்.
எஸ் வி ஜெ என் லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு நந்த்லால் சர்மா, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர்.
எஸ் வி ஜெ என் லிமிடெட்டின் இயக்குநர் (நிதி) திரு அகிலேஸ்வர் சிங், எஸ் வி ஜெ என் லிமிடெட்டின் இயக்குநர் (சிவில்) திரு சுரிந்தர் பால் பன்சால், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி முகமையின் (இயக்குநர்- தொழில்நுட்பம்) திரு சிந்தன் ஷா, இதர மூத்த அலுவலர்கள், காணொலி மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தான போது உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678841
-----
(रिलीज़ आईडी: 1678898)
आगंतुक पटल : 286