இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமைக்கு அனைத்து ஆதரவையும் இந்தியா வழங்கும்: அமைச்சரி திரு கிரண் ரிஜிஜூ
Posted On:
07 DEC 2020 5:42PM by PIB Chennai
விளையாட்டுப் போட்டிகளின் கண்ணியத்தை உறுதி செய்வதற்காக, சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமைக்கு அனைத்து ஆதரவையும் இந்தியா வழங்கும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இன்று கூறினார்.
தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம், தேசிய போதைப்பொருள் பரிசோதனை ஆய்வகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் விளையாட்டு அறிவியல் குறித்த இணையக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய திரு ரிஜிஜூ இவ்வாறு கூறினார்.
சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமையின் தலைவர் திரு விடோல்ட் பங்கா, தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் தூதர் திரு சுனில் ஷெட்டி, விளையாட்டுத் துறை செயலாளர் திரு ரவி மிட்டல், தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு ஆர் சி மிஷ்ரா, தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் தலைமை இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான திரு நவீன் அகர்வால் உள்ளிட்டோர் இந்த இணையக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
தூய்மையான விளையாட்டுகளை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவை இந்தியா வழங்குமென்று சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமையின் தலைவருக்கு திரு ரிஜிஜூ உறுதியளித்தார்.
“திரு பங்கா, போதைப்பொருள் தடுப்பு ஆராய்ச்சிக்கும், போதைப்பொருள் விசாரணைக் குழுவினரின் திறமைகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் பங்களிப்பை சர்வதேச போதைப்பொருள் தடுப்பு முகமை பயன்படுத்திக் கொள்ளும் என்று தாங்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678848
-----
(Release ID: 1678896)
Visitor Counter : 168