ஆயுஷ்

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்தில் மெய்நிகர் யோகா வகுப்புகள்

Posted On: 07 DEC 2020 5:28PM by PIB Chennai

கொவிட் -19க்கு பிந்தைய சூழலில் காணொலிக் காட்சி மூலம் இ-கல்வி முறையைப் பின்பற்ற மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம், தயாராகி வருகிறது.

இதற்காக டிஜிட்டல் ஸ்டுடியோக்கள் அமைப்பது, யோகா பயிற்சிகளை பதிவு செய்வது போன்ற வசதிகளை முன்னுரிமை அடிப்படையில் மொரார்ஜி தேசாய் யோகா மையம் மேற்கொள்ளவுள்ளது. இந்த திட்டத்துக்கு யோகா மையத்தின் நிதிநிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இது இந்த மையம் பல ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள உதவியாக இருக்கும். காணொலிக் காட்சி வகுப்புகள் மூலம், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்தின் (எம்டிஎன்ஐஒய்) நிகழ்ச்சிகள் உலகளவில் சென்றடையும்.

 

எம்டிஎன்ஐஒய்-ன் டிஜிட்டல் நடவடிக்கைகளுக்கு அடிப்படை தேவையான இணையதள இணைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதற்காக இணையதள இணைப்பை 100 எம்பிபிஎஸ் ஆக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

யோகா நெறிமுறைகள் பற்றி 30 நிமிடங்களுக்கான 10 வீடியோக்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தூர்தர்ஷனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீரின் லே பகுதியைச் சேர்ந்த 100 பேருக்கு, யோகா நெறிமுறை பயிற்சியாளர்களுக்கான ஒரு மாத சான்றிதழ் வகுப்புகளை எம்டிஎன்ஐஒய் நடத்தியது. இந்தப் பயிற்சி, லடாக்கில் தரமான யோகா பயிற்சியாளர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க உதவியது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில், தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தவும் எம்டிஎன்ஐஒய் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678840

-----



(Release ID: 1678886) Visitor Counter : 123