நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி அமலாகத்தால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க, முதலாவது விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தேர்வு செய்தன
Posted On:
05 DEC 2020 8:49AM by PIB Chennai
ஜிஎஸ்டி அமலாகத்தால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க, முதலாவது விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தேர்வு செய்துள்ளன. இந்த முதலாவது விருப்ப திட்டத்தை ஜார்கண்ட் மாநிலமும் சமீபத்தில் தேர்வு செய்துள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க 2 விருப்ப திட்டங்களை மத்திய அரசு முன் வைத்தது. முதலாவது திட்டத்தில், மத்திய அரசு ஏற்பாடு செய்து வழங்கும் கடன் திட்டம். இரண்டாவது வெளி சந்தையில் மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளும் திட்டம்.
ஜிஎஸ்டி குழுவில் உள்ள 28 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் முதலாவது திட்டத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளன. இத்திட்டத்தில் சேராமல் இருந்த வந்த ஒரே மாநிலமான ஜார்கண்ட் மாநிலமும் சமீபத்தில் முதலாவது விருப்ப திட்டத்தை தேர்வு செய்ய முடிவு செய்தது. இதன் மூலம், ஜிஎஸ்டி அமலாக்க பற்றாக்குறையை போக்க ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ.1,689 கோடி சிறப்பு கடன் வசதி கிடைக்கும். கூடுதலாக மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம், அதாவது ரூ. 1,765 கோடி கடன் திரட்டவும் அனுமதி வழங்கப்படும்.
இந்த கடன் வசதி கடந்த அக்டோபர் 23ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் படி மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு, ஏற்கனேவே ரூ.30,000 கோடி கடன் பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. அடுத்த தவணையாக ரூ.6,000 கோடி மாநிலங்களுக்கு டிசம்பர் 7ம் தேதி வழங்கப்படவுள்ளது. தற்போது ஜார்கண்ட் மாநிலமும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும்.
28 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு, கூடுதலாக கடன் பெற அனுமதிக்கப்பட்ட தொகை, சிறப்பு கடன் வசதி திட்டம் மூலம் வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றின் விவரங்களை கீழேயுள்ள இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678484
**********************
(Release ID: 1678559)
Visitor Counter : 254