சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க உ.பி.யில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி : மத்திய அமைச்சர் அறிவிப்பு

Posted On: 03 DEC 2020 3:40PM by PIB Chennai

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில், உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர், லக்னோ ஆகிய இடங்களில்ஹுனார் ஹாத்எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி டிசம்பர் 18ம் தேதி முதல் நடத்தப்படுகின்றன என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று அறிவித்தார்.

ராம்பூரின் நுமைஸ் மைதானத்தில் டிசம்பர் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரையும், லக்னோவில் டிசம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையும் நடக்கிறது. இதை உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சிகளில்  27 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகள் இடம்பெறுகின்றன.

http://hunarhaat.org என்ற இணையளத்தில், ராம்பூர் மற்றும் லக்னோ கண்காட்சிகளில் இடம்பெறும் பொருட்களை வாங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678019

*********

(Release ID: 1678019)



(Release ID: 1678051) Visitor Counter : 146