ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக மத்தியக் குழு மேற்கு வங்கம் பயணம்

प्रविष्टि तिथि: 03 DEC 2020 3:11PM by PIB Chennai

அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ஆம் ஆண்டுக்குள் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்கும் லட்சியத்தை எட்டுவதை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து அமல்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக மத்திய குழு ஒன்று மேற்கு வங்கத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

தேசிய ஜல் ஜீவன் திட்டத்தைச் சேர்ந்த இந்த நான்கு உறுப்பினர் நிபுணர் குழுவினர், டிசம்பர் 2 முதல் 4 வரை மேற்கு வங்கத்தில் தங்கியிருந்து பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்வதற்கான  ஆலோசனைகளை மாநில அதிகாரிகளுக்கு வழங்குவார்கள். மேலும், அங்குள்ள சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் ஆவணப்படுத்துவார்கள்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் இந்த குழுவினர், குடிதண்ணீர் திட்டங்களை செயல்படுத்தும் கள அலுவலர்கள், கிராம தலைவர்கள் ஆகியோருடன் உரையாடுவார்கள்.

கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், மாவட்ட குடி தண்ணீர் மற்றும் சுகாதார இயக்கத்தின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரிடமும் மத்திய குழுவினர் உரையாடி ஜல் ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறி இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அவர்களது ஒத்துழைப்பைக் கோருவார்கள்.

அனைத்து வீடுகளுக்கும் 2023-24-ஆம் ஆண்டுக்குள் குடிதண்ணீர் இணைப்புகளை வழங்கு மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678011

*******

(Release ID: 1678011)


(रिलीज़ आईडी: 1678049) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Manipuri , English , Urdu , हिन्दी , Bengali