உள்துறை அமைச்சகம்

இந்திய- அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பணிக் குழுவின் முதல் கூட்டம்

Posted On: 02 DEC 2020 7:11PM by PIB Chennai

இந்திய- அமெரிக்க போதைப் பொருள் தடுப்புப் பணிக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் அதிகாரிகள், 2020 நவம்பர் 24 அன்று காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு வாரியத்தின் துணை இயக்குநர் திரு சச்சின் ஜெயின், அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் தடுப்புக் கொள்கை அலுவலகத்தின் உதவி இயக்குநர் திரு கெம்ப் செஸ்டர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் தடுப்பு குறித்தும் இது சம்பந்தமான சட்டங்களைக் கடுமையாக்குவது குறித்தும் இருநாட்டு பிரதிநிதிகளும் விவாதித்தனர்.

இந்தியா மற்றும் அமெரிக்காவில் போதைபொருள் சம்பந்தமான விஷயங்களில் நிலவும் சவால்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. போதைப்பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்தல், உற்பத்தி செய்தல், விநியோகிப்பது ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்பை இருநாடுகளும் வலுப்படுத்துவதில் தங்களது உறுதித்தன்மையை இரு நாட்டு பிரதிநிதிகளும் வெளிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677734

**********************(Release ID: 1677808) Visitor Counter : 183