உள்துறை அமைச்சகம்

எல்லை பாதுகாப்பு படையின் 56வது உதய தின கொண்டாட்டம்


மத்திய உள்துறை இணை அமைச்சர் பங்கேற்பு

Posted On: 01 DEC 2020 5:34PM by PIB Chennai

எல்லை பாதுகாப்பு படையின்(பிஎஸ்எப்) 56வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் பங்கேற்று, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

எல்லை பாதுகாப்பு படை, தனது 56வது உதய தினத்தை இன்று கொண்டாடியது. இந்த விழா தில்லி சாவ்லா முகாமில் நடந்தது. அப்போது நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இந்நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் திரு ராகேஷ் அஸ்தானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பணியின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் திரு நத்தியானந்த் ராய் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு, அவர் வீரதீர பதக்கங்களை வழங்கினார். எல்லை பாதுகாப்பு படையின்பார்டர்மேன்என்ற -இதழையும் அமைச்சர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு நித்தியானந்த் ராய் பேசியதாவது:

கடுமையான சூழலிலும், நமது எல்லைகளை, தீரமிக்க பிஎஸ்எப் வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்பணியின் போது உயிர் தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறேன். அவர்களால் தான் ஒவ்வொருவரும் பயமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றனர். பிரதமர் திரு.நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஆகியோர் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். உங்களால் நாடு பெருமை அடைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

----



(Release ID: 1677501) Visitor Counter : 188