ரெயில்வே அமைச்சகம்

2020-இல் அதிக அளவில் சரக்கை இந்திய ரயில்வே கையாண்டது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் நவம்பரில் 9% அதிகம்

प्रविष्टि तिथि: 01 DEC 2020 4:01PM by PIB Chennai

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சரக்கு கையாள்வதின் அளவு மற்றும் போக்குவரத்தில் இந்திய ரயில்வே துறை தொடர்ந்து உச்சத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்தை விட கூடுதலான சரக்கின் அளவு மற்றும் போக்குவரத்தை இந்திய ரயில்வே ஈட்டியுள்ளது.

2020 நவம்பரில் இந்திய ரயில்வே 109.68 மில்லியன் டன் அளவிற்கு சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 9 சதவீதம் (100.96 மில்லியன் டன்)அதிகமாகும்.

சரக்குப் போக்குவரத்தின் மூலமாக நவம்பர் மாதம் ரூபாய் 10657.66 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும்.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த  ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677374

-----


(रिलीज़ आईडी: 1677467) आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Malayalam