ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

நவம்பர் 30 அன்று நிறைவடைந்த உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொழில்களிடமிருந்து உற்சாக வரவேற்பு

Posted On: 01 DEC 2020 3:50PM by PIB Chennai

மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அறிவிக்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொழில்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது.

மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு 83 மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து 215 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மருதுவ உபகரணங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு 23 மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து 28 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 2020 நவம்பர் 30 ஆகும். இரண்டு திட்டங்களுக்குமான திட்ட மேலாண்மை நிறுவனம் எஃப் சி லிமிடெட் ஆகும்.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. பரிசீலனைக்கு பிறகு மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அதிகபட்சமாக 136 விண்ணப்பங்களும், மருத்துவ உபகரணங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு அதிகபட்சமாக 28 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677366

********



(Release ID: 1677402) Visitor Counter : 198