பாதுகாப்பு அமைச்சகம்
தில்லி சர்தார் வல்லபாய் படேல் கொவிட் மருத்துவமனையில் ஐசியு திறன் அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
29 NOV 2020 6:41PM by PIB Chennai
தில்லி தேசிய தலைநகர் மண்டலத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கொவிட் மருத்துவமனையில், ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை 500 ஆக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) அதிகரித்துள்ளது. அனைத்து படுக்கைகளிலும், ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இங்குள்ள வசதிகளை ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு தலைமை இயக்குனர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
டிஆர்டிஓ கட்டுப்பாட்டில் இயங்கும் சர்தார் வல்லபாய் படேல் கொவிட் மருத்துவமனையில் மொத்தம் ஆயிரம் படுக்கைகள் உள்ளன, இங்கு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677018
*******************
(रिलीज़ आईडी: 1677034)
आगंतुक पटल : 191