புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் முழுக்க பசுமை எரிசக்தி மயமாக்கப்படும்: அமைச்சர் திரு ஆர் கே சிங்

Posted On: 28 NOV 2020 7:31PM by PIB Chennai

தனது தீவுகளை பசுமை எரிசக்தி தீவுகளாக மாற்றுவதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று கூறினார்.

மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் (ரீ-இன்வெஸ்ட் 2020) பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாலத்தீவுக்கான அமர்வில் உரையாற்றிய அமைச்சர், அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் முழுக்க பசுமை எரிசக்தி மயமாக்கப்படும் என்றார்.

"பசுமை எரிசக்திக்கு மாறுமாறு இந்த தீவுகளுக்கு நாம் இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதாவது, அவர்களது மொத்த மின்சார தேவையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து பூர்த்தி செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

'நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும். புதுப்பிக்கத்தக்க மற்றும் எதிர்காலத்துக்கான எரிசக்தி வாய்ப்புகள் மற்றும் உற்பத்தியாளர்கள், உருவாக்குபவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்காட்சி ஆகியவை இந்த மூன்று நாள் மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1676812

***


(Release ID: 1676888)