வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வலுவான, சமமான மற்றும் பரஸ்பர நிலையில் இந்தியா உலக அளவில் போட்டியிட வாய்ப்புகளை உருவாக்குவதே தற்சார்பு இந்தியா: மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல்
प्रविष्टि तिथि:
28 NOV 2020 6:35PM by PIB Chennai
வலுவான, சமமான மற்றும் பரஸ்பர நிலையில் இந்தியா உலக அளவில் போட்டியிடுவதற்கு தேவையான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே தற்சார்பு இந்தியா என்று மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை, ரயில்வே, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
‘தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும் தத்துவங்களும்' என்ற தலைப்பில் ஸ்வராஜ்யா மேக் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்நாட்டில் நம்மால் இயன்றதை உருவாக்கவும், உலகளவில் அனுபவங்களின் வாயிலாக கற்றுக்கொள்ளவும், தலைசிறந்த தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு எடுத்து வரவும், திறன், உயர்தர கல்வி மற்றும் சுகாதாரத்தை ஈரக்கவும் கவனம் செலுத்துவதே தற்சார்பு இந்தியா என்பதைக் குறிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கு வகிக்கும் என்றும், தொழில்நுட்ப சூழலை விரிவாக்கம் செய்வதற்காக புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மற்றும் தொழில் துறைக்கு தேவையான ஆதரவை அரசு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவித்தல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கோரிக்கையைப் பின்பற்றினால் மட்டுமே தற்சார்பு இந்தியா கனவை நாம் அடைய முடியும் என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் உயர்ந்த தரம் மற்றும் உயர்ந்த உற்பத்தி அளவை எட்ட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தரம் மற்றும் உற்பத்தி ஆகியவை இந்தியாவின் எதிர்கால தயாரிப்புத் துறையில் சிறப்பு அம்சங்களாக விளங்கும் என்று கூறிய அவர், அடுத்த மாதம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டு அந்தத் துறை மீது கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்கள் கூடுதலாக 10 துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதன் வாயிலாக மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676792
------
(रिलीज़ आईडी: 1676850)
आगंतुक पटल : 213