அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினை பொருட்களுக்கு முக்கியத்துவம்

Posted On: 28 NOV 2020 3:23PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-வின் முன்னோட்டமாக பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ) நடத்தியது.

நகர்ப்புற திடக்கழிவு, நிலம் மற்றும் நீரில் செயலாற்றும் ரோபாட்டுகள், சூரியசக்தி தொழில்நுட்பங்கள், திறன்மிகு மின் தொகுப்புகள், சிறு மின் தொகுப்புகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றைக் குறித்து இந்த சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.

மொத்தம் எட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 17 ஆயிரம் பேரை இவை இணையம் மூலம் சென்றடைந்தன. முன்னோட்ட நிகழ்ச்சிகளில் நிறைவு விழா 2020 நவம்பர் 27 அன்று நடந்தது. விஞ்ஞான பாரதியின் தேசிய அமைப்பு செயலாளர் திரு ஜெயந்த் சஹஸ்ரபுத்தே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினை பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் ஒரு பகுதியாக கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676718

------



(Release ID: 1676782) Visitor Counter : 152