சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

130 கோடி மக்களுக்கும் சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவ சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 26 NOV 2020 5:35PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை நடத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன் இன்று வருகை புரிந்தார்.

அரசின் முக்கிய சுகாதார திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர், இவற்றின் சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் உரையாடினார்.

அப்போது பேசிய அவர், "நாட்டின் 130 கோடி மக்களுக்கும், அவர்கள் எங்கிருந்தாலும், எப்போது தேவை ஏற்பட்டாலும், சரியான நேரத்தில், குறைந்த செலவில், பாதுகாப்பான மருத்துவ சேவைகளை அளிப்பதே அரசின் நோக்கம்," என்றார்.

இதற்காகத் தான் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியமிக்க தலைமையின் கீழ் தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டதாக டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

நாடு தழுவிய டிஜிட்டல் சுகாதார சூழலியலை உருவாக்குவதன் மூலம் சுகாதரத்துறையை தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் டிஜிட்டல் மயமாக்கும் என்று அவர் கூறினார். இதன் மூலம், நோயாளிகள், மருத்துவர்கள், சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் முறைப்படுத்தப்படும் என்றார் அவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676081

----- 



(Release ID: 1676245) Visitor Counter : 208