வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் நீடித்த மேம்பாட்டு குறிக்கோள்களுக்கான முதலீட்டு வரைபடம் அறிமுகம்
Posted On:
26 NOV 2020 12:50PM by PIB Chennai
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டமும், இன்வெஸ்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து இந்தியாவில் நீடித்த மேம்பாட்டு குறிக்கோள்களுக்கான முதலீட்டு வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இந்தியாவில் நீடித்த மேலாண்மையை முன்னெடுத்து செல்லும் வகையில் ஆறு முக்கிய நீடித்த மேலாண்மைக் குறிக்கோள்களை செயல்படுத்தும் துறைகளில் 18 முதலீட்டு வாய்ப்புகளுக்கான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
உலகளவில் நீடித்த மேம்பாட்டு குறிக்கோள்களின் வெற்றியை தீர்மானிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு தீபக் பகளா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பிரதிநிதி திரு ஷோகோ நோடா, கொவிட்- 19 பெருந்தொற்று பரவி வரும் தருணத்தில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அதிகரிக்கப்பட்ட உள்ளீடு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைப் பயன்படுத்தி இந்த வரைபடம் முதலீட்டாளர்களுக்கு உகந்த துறைகளைக் கண்டறிய உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1675985
(Release ID: 1676048)