தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2020 7:09PM by PIB Chennai

போதுமான எண் வளங்களை தொலைபேசி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு வழங்கும் விதமாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தொலை தொடர்புத் துறை புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.

இதன் படி, 2021 ஜனவரி 15-இல் இருந்து தொலைபேசியில் இருந்து அலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் போது '0' அழுத்த வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை அழுத்துவதற்கு முன்னர் தொலைபேசியில் பூஜ்ஜியத்தை அழுத்தி, அழைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675757

*******************


(வெளியீட்டு அடையாள எண்: 1675842) வருகையாளர் எண்ணிக்கை : 278
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , हिन्दी , Marathi , Urdu , English , Punjabi