தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

உமங் செயலியில் அதிக பரிவர்த்தனைகளை மேற்கொண்ட இபிஎஃப்ஓ அமைப்புக்கு பிளாட்டின விருது

Posted On: 25 NOV 2020 4:09PM by PIB Chennai

அரசு சேவைகளுக்கான புதிய மின் ஆளுமையை உறுதி செய்யும்  ஒருங்கிணைந்த  அலைபேசிச் செயலி (உமங்) தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நீதி அமைச்சர் ‌திரு ரவிசங்கர் பிரசாத், இந்த செயலியுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டோருக்கான புதிய உமங் விருதுகளை அறிமுகப்படுத்தினார். இதன்படி 25 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளை உமங் செயலியின் மூலம் மேற்கொண்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஒ, பிளாட்டின விருதைப் பெற்றுள்ளது.

உமங் செயலியைப் பயன்படுத்தி இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் 19 விதமான சேவைகளைத்  தங்கள் செல்பேசி மூலம் சுலபமாகப் பெறலாம். கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் 2020, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரையில் 7.91 லட்சம் கோரிக்கைகள்  உமங் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675628

 

*******************



(Release ID: 1675774) Visitor Counter : 173