மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு

Posted On: 25 NOV 2020 4:22PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’, திரு அரபிந்தோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முதலீடு இல்லா அடிப்படை கற்றலை புதிய முறையில் வழங்குவதை ஊக்குவிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். திறமையான தலைமை பண்பிற்காக 40 கல்வி அதிகாரிகளையும், கொவிட்-19 பெருந்தொற்றின்போது புதுமை வழிமுறைகளை பின்பற்றி கற்பித்த 26 ஆசிரியர்களையும் மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கௌரவித்தார். மேலும் தொடரின்போது கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றிய புதுமையான செயல்முறைகள் அடங்கிய மின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’, தேசிய கல்வி கொள்கை 2020, நாட்டின் கல்வி வரலாற்றின் விரிவான மற்றும் எதிர் காலத்திற்கு உகந்த ஆவணமாக திகழ்வதாக தெரிவித்தார். குழந்தைகளிடையே போட்டி மனப்பான்மையை  ஏற்படுத்தி, திறமை மற்றும் நுண் சிந்தனைத் திறனை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்விக்கான மேலாண் இயக்குனர் திரு ராட் ஸ்மித், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையை வெகுவாக பாராட்டியதோடு கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டு, அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கிற்குபாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675634

*******************



(Release ID: 1675736) Visitor Counter : 116