மத்திய அமைச்சரவை

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் நெதர்லாந்து கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி

प्रविष्टि तिथि: 25 NOV 2020 3:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ-க்கும், நெதர்லாந்து கணக்காளர் நிறுவனத்துக்கும் (விஆர்சி) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளின் கணக்குப் பதிவியல், நிதி மற்றும் தணிக்கை உள்ளிட்டவை மேலும் வலுவடையும்.

செயல்படுத்துவதற்கான வியூகங்கள் மற்றும் இலக்குகள்:

•        நெதர்லாந்தில் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை ஐசிஏஐ மற்றும் விஆர்சி இணைந்து நடத்தும்.

•        உறுப்பினர் மேலாண்மை, தொழில் நெறிமுறைகள், தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொழில்முறை சார்ந்த கல்வியைத் தொடர்தல், தொழில்ரீதியான கணக்கியல் பயிற்சி, கல்வித் தேர்வுகள் மற்றும் கணக்குப் பதிவியல் துறையில் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது

•        நெதர்லாந்தில் கணக்குப் பதிவியல், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தணிக்கை ஆகிய துறைகளில் குறுகிய காலத்தில் தொழில் சார்ந்த பயிற்சி அளிப்பது

•        மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரிமாற்ற நிகழ்வுகளின் வாயிலாக வளர்ந்துவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பது

•        கணக்குப்பதிவியல் தொழில் சம்பந்தமாக இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தடையற்ற தகவல்களை பரிமாறிக்கொண்டு, தேவை ஏற்படும்போது சர்வதேச தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுதல்.

இந்தியா மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தலைசிறந்த நிறுவனங்களுக்கு இடையே ஆன இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பட்டயக் கணக்காளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675596

*******************


(रिलीज़ आईडी: 1675645) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam