சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஆப்பிள் அலைபேசிகளிலும் உமங் செயலி தளத்திலும் நியாய பந்து செயலி நாளை அறிமுகம்
Posted On:
25 NOV 2020 1:43PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்பு பிரிவு 39 ஏ-வின் கீழ் இலவச சட்ட உதவியை வழங்கும் வகையில் நியாய பந்து செயலியை ஆப்பிள் அலைபேசிகளிலும் புதிய மின் அரசாளுமைக்கான யூனிஃபைட் அலைபேசிச் செயலி (உமங்) தளத்திலும் இனி பயன்படுத்தலாம். நாளை (26.11.20) அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்று இந்த சேவையை நீதித்துறை செயலாளர் தொடங்கி வைப்பார்.
உமங் செயலி தளத்தில் நியாய பந்து செயலி அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் இதில் பதிவு செய்துள்ள சுமார் 2.5 கோடி பேர் பயனடைவார்கள். அறிமுக விழாவின்போது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு இணைய கருத்தரங்கும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை 2020 நவம்பர் 26-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு https://webcast.gov.in/molj/doj/ என்னும் முகவரியில் நேரலையாகக் காணலாம்.
எளிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தி அதன்மூலம் மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சட்டம் மற்றும் நீதி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் நியாய பந்து அலைபேசிச் செயலியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675570
*******************
(Release ID: 1675593)
Visitor Counter : 214