குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

வாரணாசியில் டிசம்பர் 7 வரை கண்கவர் காதி பொருட்கள் கண்காட்சி

Posted On: 22 NOV 2020 4:54PM by PIB Chennai

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வாரணாசியில் ஏற்பாடு செய்துள்ள காதி கண்காட்சியில் ஜம்மு காஷ்மீரில் பிரசித்திப் பெற்ற தேன், கைத்தறிப் பட்டு, பருத்தி மற்றும் கம்பளி ஆடைகள், மூலிகை மருந்துகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

இந்தக் கண்காட்சியை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இந்தக் கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளனர்.

 

 90 அரங்குகள் கொண்ட இந்த கண்காட்சி வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும். லக்னோவைத் தொடர்ந்து கொவிட்-19 பொது முடக்கத்திற்குப் பிறகு இரண்டாவதாக வாரணாசியில் இந்த கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674890

*******************



(Release ID: 1674918) Visitor Counter : 197