சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

உள்ளூர் நிபுணத்துவத்தை ஊக்குவிக்க 200 முன்னணி நிறுவனங்களுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூட்டு

Posted On: 20 NOV 2020 5:18PM by PIB Chennai

உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளூர் நிபுணத்துவத்தை பயன்படுத்த, 200-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படவுள்ளது.

இந்த முயற்சிக்கு பிரபல முன்னணி நிறுவனங்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஐடி ரூர்கே, மும்பை உட்பட 18 ஐஐடிக்கள், 26 என்ஐடிக்கள் மற்றும் 190 பிரபல பொறியில் கல்லூரிகள் நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இவற்றில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலைகளில், அந்த நிறுவனங்கள் தெரிவிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு சாலைகள் அமைக்கப்படும். நெடுஞ்சாலைகளை அமைப்பதில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674424

**********************



(Release ID: 1674474) Visitor Counter : 169