சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 20 NOV 2020 4:08PM by PIB Chennai

நவம்பர் 15-இல் இருந்து 21 வரை அனுசரிக்கப்படும் தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று பங்கேற்றார்.

பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், சுகாதாரத் துறையின் முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்துரைக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

'எந்த இடத்திலும், எந்த ஒரு சுகாதார மையத்திலும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் தரமான, சமமான மற்றும் கண்ணியமான சேவை' என்பதே இந்த வருட தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரத்தின் மையப் பொருளாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறிய அவர், இதற்காக முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் லட்சியத்தை பாராட்டினார்.

                மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674392

-----

 



(Release ID: 1674447) Visitor Counter : 151