நிதி அமைச்சகம்

உத்தரப்பிரதேசத்தில் வருமானவரித்துறை சோதனை

Posted On: 20 NOV 2020 2:19PM by PIB Chennai

வரி ஏய்ப்பு தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் கால்நடை தீவன உற்பத்தியாளருக்கு சொந்தமான 16 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்.

வட இந்தியாவில் கால்நடை தீவனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனம் ஒன்று, லாபத்தை குறைத்துக் காட்டுவதற்காக, போலி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றதாக பொய் கணக்கு காட்டியுள்ளது.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் கான்பூர், கோரக்பூர், நொய்டா, தில்லி, லூதியானா உட்பட 16 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 18ம் தேதி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இவற்றை ஆராய்ந்தபோது, தில்லியில் உள்ள போலி நிறுவனங்களிடம் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு கடன் பெற்றதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் கால்நடை தீவின குழுமத்துக்கு சொந்தமான சிட் பண்ட் நிறுவனமும் இதேபோல் பல கோடிக்கு கடன் பெற்றதாக கணக்கு காட்டியுள்ளது.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் டாக்சி டிரைவர் என்பது, அவருக்கு 11 வங்கி கணக்குகள் இருந்தது தெரியவந்தது. இந்த வங்கி கணக்குகள் மூலமாக பண பரிமாற்றங்கள் நடந்துள்ளன. கடன் பெற்றதாக கணக்கு காட்டப்பட்ட ரூ.121 கோடியும், கணக்கில் காட்டப்படாத வருவாய் என்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த குழுவைச் சேர்ந்த முக்கிய நபர், கணக்கில் காட்டாத பணத்தை வீடுகள் கட்டுவதில் முதலீடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.52 லட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.30 கோடி ரொக்கப் பணமும் கண்டறியப்பட்டது. 7 லாக்கர்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சோதனை நடைபெறவுள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674334

-----

 

 



(Release ID: 1674408) Visitor Counter : 104